இலங்கை செய்தி

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்த அணியினர் திட்டம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான யோசனைமுன்மொழியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

“ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்து எங்கள் குழுவில் உள்ளது.

அடுத்த தேர்தல் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அந்த நேரத்தில் நாங்கள் ஒரு கட்சியாக சிறந்த நடவடிக்கைகளை எடுப்போம்.” – எனவும் கஞ்சன குறிப்பிட்டார்.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை