மூன்று முக்கிய பெரும் நாடுகள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
அவுஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து அணுசக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி படையணியை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
மூன்று நாடுகளும் இணைந்து நவீனதொழில்நுட்பத்தில் இயங்ககூடிய நீர்மூழ்கி படைப்பிரிவை உருவாக்கவுள்ளன. அவுஸ்திரேலிய அமெரிக்க பிரிட்டிஸ் தலைவர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நீர்மூழ்கிகள் அணுசக்தியில் இயங்கும் அணுவாயுதங்களை கொண்டிராது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை அணுவாயுதங்கள் அற்ற நாடு என்ற அவுஸ்திரேலியாவின் உறுதிமொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த உடன்படிக்கை மூலம் பிரிட்டினிற்கு பின்னர் அமெரிக்காவின் நீர்மூழ்கிகளை கொள்வனவு செய்யும் இரண்டாவது நாடாக அவுஸ்திரேலியா மாறவுள்ளது. புதிய நீர்மூழ்கிகள் தற்போது அவுஸ்திரேலியாவிடம் உள்ள நீர்மூழ்கிகளை விடவேகமாகவும் நீண்டதூரமும் செயற்படக்கூடியவை.
மேலும் இந்த நீர்மூழ்கிகள் மூலம் நீண்டதூரத்தில் வைத்து எதிரிகளை தாக்கும் வலிமையை அவுஸ்திரேலியா பெறும். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பயிற்சிக்காக அவுஸ்திரேலிய மாலுமிகள அமெரிக்கா பிரிட்டனின் நீர்மூழ்கிகளிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.மேலும் இந்த உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவின் நீர்மூழ்கிகள் 2027 முதல் பேர்த்தில் நிலைகொண்டிருக்கும்.