போர் பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கும் சீனா
ஆதிகரித்துவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் சீனா இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவீனத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு பாதுகாப்பு செலவீனத்திற்காக 7.2 வீதம் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்ட வரவு செலவு திட்டம் குறித்த அறிவிப்பில், இராணுவ செலவீனங்களுக்காக 1.55 ட்ரில்லியன் யுவான் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புpரதமர் லீ கெகியாங், 2027 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை இராணுவத்தின் நூற்றாண்டு விழாவிற்கான இலக்குகளை மையமாகக் கொண்டு நமது ஆயுதப் படைகள், இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், போர் தயார்நிலையை அதிகரிக்கவும், இராணுவத் திறன்களை மேம்படுத்தவும் பணியாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
போர் நிலைமைகளின் கீழ் பயிற்சிக்கு அதிக ஆற்றலைச் செலவிட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைத்து திசைகளிலும் களங்களிலும் இராணுவப் பணிகளை வலுப்படுத்த நன்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.