செய்தி தமிழ்நாடு

சுந்தர வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள் பாலித்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவிலில் சாமிக்கு தினமும் காலை மாலை நேரங்களில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இன்று, விஷேச மலர் அலங்காரத்தில் சுந்தர வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

அங்கு, சாமிக்கு பல்வேறு பூஜைகள் ஆராதனையில் நடைபெற்றது. பின்னர், உத்திரமேரூர் முக்கிய வீதிகள் வழியாக சுந்தர வரதராஜ பெருமாள் ஊர்வலம் வந்து காட்சியளித்தார்.

பக்தர்கள் தீபம் ஏற்றி சாமியை வழிபாடு செய்தனர். இதில் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!