சிங்கப்பூரில் கூரையிலிருந்து விழுந்து இளம் கட்டுமான ஊழியர் மரணம்
சிங்கப்பூரில் கூரையிலிருந்து விழுந்து இளம் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடம் மேலும் ஒரு வேலையிட மரணம் நேர்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்தவர் 33 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. அந்தக் கட்டுமான ஊழியர் 4 மீட்டர் உயரத்திலிருக்கும் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கூரையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அவர் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.அவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடுமையான காயத்தின் காரணத்தால் முதலாம் திகதி அவர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
சம்பவம் சென்ற மாதம் 26ஆம் திகதி, 2 மார்சிலிங் லேனில் இடம்பெற்றதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
விபத்து குறித்து விசாரணை நடத்துவதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
குறித்த பணிபுரிந்த Guan Teck Construction 2000 நிறுவனத்துக்கு முழுமையான வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அடுத்த 3 மாதத்துக்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் சேர்ப்பதற்கு நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் விபத்து குறித்து மனிதவள அமைச்சுக்கு விளக்கம் அளிக்கவேண்டும். விசாரணை முடிவில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.