சர்வதேச கருத்தரங்கு
சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் துறை, வேதியல் துறை,
ஆராய்ச்சி இயக்குனரகம் ஆகியவற்றின் சார்பில் இந்தோ ஜெர்மன் DEEPT2023 என்கிற(Developments in Established and Emerging Photovoltaic Technologies)நிறுவப்பட்ட மற்றும் வளரும் போட்டோவோல்டிக் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அயல் நாடுகளலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிருந்து 600க்கும் lமேற்பட்ட இயற்பியல்,வேதியல்,
நானோ தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
எஸ்ஆர்எம் ல் அமைந்துள்ள டி. பி. கணேசன் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு வருகை தந்தவர்களை இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் துறை பேராசிரியை பி. மலர் வரவேற்றார்.
கருத்தரங்கின் நோக்கம் பற்றி எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப டீன் முனைவர் டி. வி.கோபால் விளக்கி பேசுகையில்:
இங்கு நடைபெறும் கட்டுருவக்கத்துடன் போட்டோவோல்டிக் தொழில்நுட்பம் , சூழ்ந்துகொள்ளல்கள், சூரிய அணுக்கள் உருவக்கப்படுத்துதல் ஆகியவற்றை விரைவுபடுத்த உதவும்.
மேலும் போட்டோவோல்டிக் அணுக்கள் தொழில்நுட்பத்தில் விரிவானவள் ஆய்வு மேற்கொக்கொள்ளவும், வளர்ச்சிக்கும் பகிர்ந்து கொள்ளவும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் endrar.
நிகழ்ச்சியில் ஜெர்மனி நாட்டின் கொலோஜென் பல்கலைக்கழகத்தின் இன்னாற்கானிக் கெமிஸ்ட்ரி துறை இயக்குனர் முனைவர் சஞ்சய் மாத்தூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து கருத்தரங்கு மலரினை வெளியிட்டு பேசுகையில் :
ஹைட்ரஜன் எனப்படும் நீரக வாய்வும், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியும் பொருளாதாரத்தின் காராணிகள், ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய மின்சாரம் அதிகம் தேவை படுகிறது.
எனவே மின்சாரத்தை ஈடுகட்ட புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டம் தேவை. இந்தியாவும் ஜெர்மனியும் இந்த இரு பொருளிலும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
இந்திய நாடு மின்சாரத்தை ஈடுகட்ட புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டம் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
ஜெர்மனி நாடு கல்வியாளர்களையும், வேதியல் வல்லுநர்களையும் இந்த திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தோ ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவி இதற்கு அவசியம்.
இந்த கருத்தரங்கு இத் திட்டத்திற்கான வழிகளை உருவாக்க உதவும், இன்று ஹைட்ரஜன் தொழில்நுட்பம் பல்வேறு வழிகளில் கவனம் செலுத்தும் நிலை உள்ளது என்றார்.
ஜெர்மனி நாட்டின் கொலோஜென் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் பால் வான் லூசுடிரீசெட் பங்கேற்று பேசுகையில் :
இந்தியாவிலும் ஜெர்மனியிலும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மிக மாறுபட்டவை, ஆனால் அவைகளை இருவரும் பகிர்ந்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது.
இந்திய நாடு மனிதவளம் மிக்க நாடு, அதிலும் இளஞ்சர்களை அதிகம் கொண்ட நாடு. இதுவே இந்திய நாட்டின் பலமாகும், இளைஞ்சர்கள் மூலம் நிறைய சாதிக்க முடியும் என்றார்.
கருத்தரங்கில் இந்தோ ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணை அறிவியல் அலுவலர் முனைவர் சகுயிப் சைக்கா, ஜவகர்லால் நேரு மையத்தின் பேராசிரியர் ஜே. எஸ். போஸ்,
எஸ்ஆர்எம் அறிவியல் துறை டீன் ஜான் திருவடிகள், ஆராய்ச்சி துறை டீன் முனைவர் பெர்ணாட்சா நெப்போலியன், இயற்பியல் துறை தலைமை பேராசிரியர் கார்த்திகேயன்,
வேதியல் துறை தலைமை பேராசிரியர் முனைவர் அர்த்த நாரீஸ்வரி ஆகியோர் பங்கேற்று பேசினர்.