இலங்கை

எரிபொருள் கோட்டவில் மாற்றமில்லை – மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டவில் மறு அறிவித்தல் வரை எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற பெற்றோலியக் கூட்டுதாபன மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும்  மாதாந்தம் முற்பதிவு செய்யப்படும் எரிபொருட்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

கடந்த 3 வாரங்களில் நாளாந்த எரிபொருள் பாவனை மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் தரவு மதிப்பாய்வில் எரிபொருள் கோட்டாவினை அதிகரிப்பதற்கு முன்னர் காணப்பட்ட அன்றாட விநியோகத்திற்கு சமாந்தரமாகவே காணப்பட்டுள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது.

அத்தோடு எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டதன் பின்னர் கியூ.ஆர். குறியீடுகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் வீதம் குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்