எகிப்து பிரமிட்டில் மறைவான பாதை கண்டுப்பிடிப்பு!
எகிப்து – கிசாவின் கிரேட் பிரமிட்டுக்குள் ஒன்பது மீட்டர் நீளமுள்ள மறைவான பாதை கண்டுப்பிடிக்கப்ப்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் அகமது இசா தெரிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் செவ்ரான் மண்டலத்திற்குப் பின்னால் அமைந்துள்ள குஃபு பிரமிட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் இந்த பாதை கண்டுப்படிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த பகுதியில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.
ரகசிய சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கேபிள், கட்டமைப்பின் சுமையைக் குறைக்க கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்த த்ரிடீ ஸ்கேனின் நடைபெற்று வருவதாகவும், இது மேலும் பல விடயங்களை வெளிக்கொணரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிசாவின் பெரிய பிரமிட்டுகளில் மிகப்பெரிய பிரமிடு பண்டைய உலகில் எஞ்சியிருக்கும் அதிசயமாகும். இது 4500 ஆண்டுகளுக்கு முன்பு பார்வோன் குஃபுவின் ஆட்சியின் போது கல்லறையாக கட்டப்பட்டது.