இலங்கையில் தயாரிக்கப்படும் வேகா காருக்கு உரிமம் கிடைத்துள்ளது

இலங்கையால் தயாரிக்கப்பட்ட காருக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வேகா காருக்கு மோட்டார் போக்குவரத்து துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு வழங்கப்பட்டது.
அங்கு மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வேகா காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.
(Visited 10 times, 1 visits today)