அணு ஆயுத போர் தொடர்பில் ரஷ்யா பரபரப்பு எச்சரிக்கை
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் அணு ஆயுத போர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் மேற்கத்திய நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை நிறுவனருமான டிமிட்ரி மெட்வெடேவ் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஆணித்தரமாக கூறினார்.
மேலும் அவ்வாறு நிறுத்தாவிட்டால் கடுமையான அணு ஆயுத போருக்கு உட்பட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் முடிவு உக்காரனுக்கு முன்னிலையில் என்றுமே இருக்காது என்றும், ரஷ்யாவிற்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், மனித நாகரிகமே இருந்த தடயமின்றி அழிந்துவிடும் என கூறினார்.
ரஷ்யா இல்லாத உலகம் எங்களுக்கு தேவையில்லை என்றும் சூளுரைத்தார்.
கிரிமியாவை மீட்பதற்கான எந்தவொரு முயற்சியும் ரஷ்யாவின் வசம் உள்ள அனைத்துப் படைகளுடன் கிய்வின் ஆட்சியின் கீழ் எஞ்சியிருக்கும் உக்ரைன் முழுவதும் எரியும் மெட்வெடேவ் எச்சரிக்கை விடுத்தார்.