சுவிட்ஸர்லந்தில் ஏலத்தில் வரும் உலகில் மிகவும் அரிய வைரம் – வெளியான சிறப்பு அம்சம்
சுவிட்ஸர்லந்தின் Blue Royal என்ற வைரம் 50 மில்லியன் டொலர் வரை விலைபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் மிகவும் அரிய வைரங்களில் அதுவும் ஒன்று எனக் கருதப்படுகிறது. அதன் அளவு 17.6 கேரட் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு பெரிய நீல வைரம் ஏலத்தில் விடப்படுவது இதுவே முதல்முறையாகும். இம்மாதம் 7ஆம் திகதி ஜெனீவா நகரில் குறித்த வைரம் ஏலத்தில் விற்கப்படும் என கூறப்படுகின்றது.
அதோடு மற்ற பல அரிய நகைகளும் ஏலத்திற்கு வருகின்றன. பிரபல ஹாலிவுட் நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் (Audrey Hepburn) ஒரு திரைப்படத்தில் அணிந்திருந்த முத்து மாலையும் அதில் அடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏலத்திற்கு Christie நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)