உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவு
உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பலின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, பின்லாந்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமான பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது.
குறித்த சொகுசு கப்பல் இந்த ஆண்டு அக்டோபரில் சோதனைக்காக கடலுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கப்பலுக்கு ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் ஐகான் ஆஃப் தி சீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் (கிட்டத்தட்ட 1,200 மீட்டர்) மற்றும் 250,800 தொன் எடை கொண்டது.
இது 2024 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் 5,610 பயணிகள் மற்றும் 2,350 பணியாளர்கள் தங்க முடியும்.
(Visited 12 times, 1 visits today)