மகளிர் உலகக் கோப்பை – இந்தியா, வங்கதேசம் போட்டி மழையால் ரத்து
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், நவி மும்பை(Navi Mumbai) மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இறுதி லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவி செய்தது.
ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே மழை குறுக்கிட்டதால் போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றது.
வங்கதேசம் அணி சார்பில் ஷர்மின் அக்தர்(Sharmin Akhtar) 36 ஓட்டங்களும் சோபனா மோஸ்தரி(Shobana Mostari) 26 ஓட்டங்களும் பெற்றனர்.
120 என்ற ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது.
இடைவிடாது பெய்த மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 29ம் திகதி ஆரம்பமாகும் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
அதனை தொடர்ந்து அக்டோபர் 30ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.





