செய்தி விளையாட்டு

Womens WC – 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 10வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில் ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில், 252 ஓட்ட வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 70 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சால் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

தோல்வியை நோக்கி சென்ற அணியை தனி ஆளாக நின்று நிதானமாக விளையாடிய டி கிளெர்க் 84 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 48.5 ஓவரில் 252 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி