காவல்துறையில் முன்னிலையாக முடியாதென அறிவித்த விமல் வீரவன்ச
தங்காலை காவல் நிலையத்தில் இன்று முன்னிலையாக முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தங்காலை காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அண்மையில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சனா என்ற நபரின் அரசியல் தொடர்புகள் குறித்து, விமல் வீரவன்ச வெளிப்படுத்திய உண்மைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, விமல் வீரவன்ச வெளிப்படுத்திய உண்மைகள் குறித்து வாக்குமூலம் பெற இன்று தங்காலை காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
(Visited 6 times, 1 visits today)





