யாழ். வடமராட்சியில் அதிசயம்! அச்சத்தில் மக்கள்
நாடளாவிய ரீதியில் காலநிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
அதிலிருந்து இன்னும் வெளியில் வராத நிலையில், மழை இன்னும் நீடிக்கும் என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
அந்த வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே பெரும் கேள்வியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதை பார்வையிடுவதறகாகவும் மக்கள் படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









