WC Super 8 – ஆஸ்திரேலியா அணிக்கு 206 ஓட்டங்கள் இலக்கை நிர்ணயித்த இந்தியா
டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – கோலி களமிறங்கினர். தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விளையாடிய ரோகித் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 92 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து துபே- சூர்யகுமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஸ்டார்க் பந்தில் நடையைகட்டினார்.
அதனை தொடர்ந்து துபே மந்தமாக விளையாடி 22 பந்தில் 28 ரன்களுடன் வெளியேறினார். இறுதியில் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 200 ரன்களை எடுக்க உதவினார்.
இதனால் இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் ஹசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.