WC Super 8 – இங்கிலாந்து அணி தோல்வி
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.
அதிகபட்சமாக டி காக் 56 ரன்களும் மில்லர் 43 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர்- சால்ட் களமிறங்குகினர். சால்ட் 11, பட்லர் 17, பேர்ஸ்டோவ் 16, மொயின் அலி 9 ரன்னிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்நிலையில் புரூக் மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். புரூக் நிதானமாக விளையாட லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார்.
அவர் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து புரூக் அரை சதம் விளாசினார். கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை நோர்க்யா சிறப்பாக விசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.