செய்தி விளையாட்டு

WC Super 8 – அமெரிக்காவை எளிதில் வென்ற இங்கிலாந்து

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – அமெரிக்கா மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதையடுத்து அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவன் டெய்லர், அண்டிரிஸ் களமிறங்கினர். அண்டிரிஸ் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாப்லி பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார்.

அடுத்துவந்த நிதிஷ் குமார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க வீரர் டெய்லர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்னில் அவுட் ஆனார்.

சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் நிதிஷ் குமார் 30 ரன்னிலும், பின்னர் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அமெரிக்கா 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் 19வது ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

19வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய ஜோர்டன், 2வது பந்தில் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அடுத்து வீசிய 3 பந்துகளிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

19வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜோர்டன் 2.5 ஓவரில் 10 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

அதிரடியாக ரன் சேர்க்கத் துவங்கிய இந்த ஜோடியால், இங்கிலாந்து அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இறுதியில் ஜோஸ் பட்லர் 38 பந்துகளில் 7 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 83 ரன்களும் , பிலிப் சால்ட் 25 (21) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

(Visited 28 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி