தாளையாடி குடிநீர் திட்டம் ஊடாக யாழ் மாநகர பகுதியில் 320 கி.மீற்றருக்கு நீர் விநியோகம்

தாளையாடி குடிநீர் திட்டம் ஊடாக யாழ் மாநகர சபைக்கு கீழ் உள்ள பகுதிகளில் சுமார் 320 கிமீறீறர் வரை குழாய் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தாளையாடி குடிநீர் திட்டம் மீசாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தாங்கிக்கு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மண்டதீவு வரை குழாய்கள் பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வருடம் 5350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்னர் குறித்த திட்டத்தை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் சுமார் 3 இலட்சம் வரையான மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்தியாக்கப்படும்
(Visited 3 times, 1 visits today)