இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களுக்கான எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை ஓட்டும் போது குறைந்தது 50 மீற்றர் தூரத்தை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கைகளை இலத்திரனியல் காட்சிப் பலகைகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வாகன சாரதிகள் அவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையில், ஒவ்வொரு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் உள்ள மின்னணு காட்சி பலகைகளில் காட்டப்படும் வேக வரம்பை மீற வேண்டாம் என்றும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்கின்றனர்.
(Visited 44 times, 1 visits today)