ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்று – தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வலியுறுத்தல்!
ஐரோப்பிய நாடுகளில் குளிர்பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பல நாடுகளில் ப்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இது சுகாதார அதிகாரிகளுக்கு பல சவால்களை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A/H3N2 வைரஸ், குறிப்பாக துணைப்பிரிவு K உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் புதிதாக பரவி வரும் வைரஸ் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
A/H3N2 என்ற பழைய திரிபுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியால் தற்போதைய புதிய திரிபை சமாளிக்க முடியாது என்றும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தொடர்பிலும் மருத்துவர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறைந்த செயல்திறன் கொண்டுள்ள போதிலும் தேவையான அனைவரும் கட்டாயம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




