விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டம் – நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 46 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 16 பெண்கள், 6 குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி தனது X தள பக்கத்தில் தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பிரச்சார கூட்டத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.