விஜயின் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு – பலர் வைத்தியசாலையில் அனுமதி!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று (27.09) கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரங்கள் நிறைவுற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து கரூரில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அவர் சென்றிருந்தார்.
இந்நிலையில் கரூரில் விஜயை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இதில் பலர் மூச்சு திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் வண்டிகள் பலரை சுமந்து கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையொன்றும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சார நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.





