தைவானுக்கு 11 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!
தைவானுக்கு சுமார் $11 பில்லியன் (£8.2 பில்லியன்) மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த தொகுப்பில் மேம்பட்ட ரொக்கெட் ஏவுகணைகள், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் மற்றும் பல்வேறு ஏவுகணைகள் அடங்கும்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. அதேநேரம் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியமைத்ததில் இருந்து இரண்டாவது முறையாக தைவானுக்கு ஆயுதங்களை வழங்கவுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் உதவிக்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று நன்றி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் எனத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த அறிவிப்பு குறித்து சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





