மாணவர்களுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவித்த அமெரிக்க பள்ளி ஊழியர் கைது
அமெரிக்க உயர்நிலைப் பாடசாலை ஊழியர் ஒருவர், மாணவர்களுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரன்சில் உள்ள வெஸ்ட் புளோரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் உதவியாளராகப் பணியாற்றும் 32 வயதான அலெக்சாண்டர் லூயிஸ், பல முறை மனித மலத்தின் மோசமான வாசனையை (fart Spray) பயன்படுத்தியதாகவும் இது சில மாணவர்களுக்கு “சுவாசப் பிரச்சினைகளை” ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், சொத்துக்களுக்கு தீங்கிழைக்கும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அலெக்சாண்டர் லூயிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்
லூயிஸ் பள்ளியில் மல நாற்றத்தைப் பின்பற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட இணையம் மூலம் பெறப்பட்ட ஸ்ப்ரேயை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியதாகவும், காலப்போக்கில் பள்ளியின் செயல்பாட்டை சீர்குலைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





