சமூக ஊடகங்களில் வைரலான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடனம்
தெற்காசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump), முதலாவதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின்(Anwar Ibrahim) அழைப்பை ஏற்று ஆசியான்(ASEAN) உச்சி மாநாட்டில் பங்கேற்க கோலாலம்பூரை(Kuala Lumpur) வந்தடைந்தார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஆசியாவுக்கு செல்லும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதிக்கு கோலாலம்பூரில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு அம்சமாக விமான நிலையத்தில் மலேசியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்த நடனக் கலைஞர் தங்கள் நடனம் மூலம் டிரம்பை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் யாரும் எதிர்பாராத நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
அவரது நடன அசைவுகளின் வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகியுள்ளது, நெட்டிசன்கள் அவரது நடன அசைவுகளை பாராட்டியுள்ளனர்.
https://www.instagram.com/reel/DQRVS8hjFWJ/?utm_source=ig_web_copy_link
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து




