அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட் தொற்று உறுதி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டுள்ளதை வௌ்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
அவரிடம் இலேசான அறிகுறிகள் காணப்படுவதாக வெள்ளை மாளிகை கூறியது.
அவருக்கு வயது 81ஆகின்றது. பைடன் 2 தடுப்பூசிகளுடன் கூடுதல் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார். முன்பு இரண்டு முறை அவருக்கு கொவிட் – 19 நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.
லாஸ் வேகஸில் (Las Vegas) பிரசாரம் செய்து வரு பைடன் இன்று இரவு நடக்கவிருந்த கூட்டத்தை ரத்துச் செய்துள்ளார்.
சென்ற மாத இறுதியில் முன்னாள் ஜனாதிபதி டொால்ட் ட்ரம்புடன் (Donald Trump) நேரடி விவாதத்தில் பங்கேற்ற பைடன் மோசமாகத் தடுமாறினார்.
அதனால், ஜனாதிபதி போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் வேளையில் பைடனுக்கு கொவிட் – 19 தொற்றியுள்ளது.
(Visited 11 times, 1 visits today)