உலகம் செய்தி

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல் – 14 பேர் பலி!

அமெரிக்க இராணுவம் கடந்த திங்கட்கிழமையன்று பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடத்திய தாக்குதலில் 14 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு கப்பல்களை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதல்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே உயிர் பிழைத்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இன்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பேரில், கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள்  கடத்தல்காரர்கள் பயணித்ததாக கூறப்படும் நான்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நான்கு கப்பல்களும் அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் பாதைகளில் பயணித்தாகவும், இதனைத் தொடர்ந்தே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth)  தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி