குவைத்தில் இருக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள், அபராதம் மற்றும் சட்ட தடைகள் இன்றி நாட்டை விட்டு வெளியேற பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
குவைத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக சுமார் 19,620 இலங்கையர்கள் தங்கியிருந்த இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் சுமார் 5,000 இலங்கையர்கள் மீண்டும் இலங்கை செல்வதற்காக தமது தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்தார்.
இந்த பொது மன்னிப்புக் காலத்திற்குப் பின்னர் அவர்கள் இலங்கைக்கு வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டு, 650,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்.
மேலும், பொது மன்னிப்பு காலத்தில் இந்த அபராதத்தை செலுத்திய பிறகு, தேவைப்பட்டால் குவைத் மாநிலத்தை விட்டு வெளியேறாமல் தங்களுடைய குடியிருப்பு விசாவை சட்டப்பூர்வமாக்கிய பிறகு அவர்கள் நாட்டில் தங்க முடியும்.
இதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அறிவிக்கும் திறன் கொண்ட டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.