ஆர்வலர் சார்லி கிர்க்கின் புகைப்படத்துடன் அமெரிக்க நாணயத்தை வெளியிட வலியுறுத்தல்
இந்த மாத தொடக்கத்தில் உட்டா பல்கலைக்கழகத்தில் ஒரு பொது நிகழ்வின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க்கின் படத்தை அமெரிக்க நாணயத்தில் வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் உதவியாளருமான கிர்க், சிறப்பு வெள்ளி டாலர் நாணயங்களில் இடம்பெறலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
டெக்சாஸைச் சேர்ந்த ஆகஸ்ட் ப்ஃப்ளூகர் மற்றும் அரிசோனாவைச் சேர்ந்த அபே ஹமாதே ஆகிய இரண்டு குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கிர்க்கின் படத்தை அமெரிக்க நாணயத்தில் வைக்க டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
குடியரசுக் கட்சி இரட்டையர்கள் இந்த வார இறுதியில் மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டால், கிர்க் அமெரிக்க நாணயத்தில் தோன்றும் இளைய அமெரிக்கராக மாறுவார்.





