காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட உக்ரேனிய கிரிப்டோ வர்த்தகர்

உக்ரேனிய கிரிப்டோ முதலீட்டாளரும் வலைப்பதிவருமான கோஸ்ட்யா குடோ (Kostya Kudo) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிட்காயின், எத்தேரியம் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளின் விலைகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
32 வயதான கிரிப்டோ முதலீட்டாளரின் உடல் உக்ரைனின் கியேவின் ஒபோலோன் மாவட்டத்தில் ஒரு காரில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து கிரிப்டோகரன்சிகளின் விலைகள் சரிந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கோஸ்ட்யா குடோவின் மரணம் நிகழ்ந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)