உக்ரைன் போர் அணு அழிவுக்கு வழிவகுக்கலாம் – டிரம்பிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உக்ரைன் – ரஷ்யா போர், மூன்றாம் உலகப் போருக்கோ அல்லது அணு அழிவுக்கோ வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் உணரவில்லை என, உக்ரைனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மற்றும் இங்கிலாந்துக்கான முன்னாள் தூதர் வாடிம் பிரிஸ்டைகோ தெரிவித்துள்ளார்.
“டிரம்ப் இந்த போரை ஒரு ஐரோப்பிய பிரச்சனையாகவே பார்க்கிறார். ஆனால் இது உலகத்துக்கே ஆபத்தானது. அமெரிக்காவின் பார்வை தற்போது பசிபிக் பிராந்தியத்திலும் சீனாவை சமாளிப்பதிலும் உள்ளதாகவும், ஐரோப்பாவுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
அமெரிக்கா ஐரோப்பாவை அதன் இயற்கையான பங்காளியாக பார்க்கவில்லை. டிரம்ப் மற்றும் MAGA குடியரசுக் கட்சி, ஐரோப்பாவிற்கு ஆதரவை அளிக்க தயாராக உள்ளனர்.
ஆனால் வெற்றியில் பங்கு பெற்றால் மட்டுமே. அவர் இன்னும் ரஷ்யா பிரச்சனையை ஐரோப்பா தனியாக கையாள முடியும் என நம்புகிறார்.
போரின் தீவிரம் மற்றும் அதன் பரிணாமம் குறித்து அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த சிறிய போர் ஒரு அணு அர்மகெதோனாக மாறக்கூடும் என்பதை டிரம்ப் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” என இங்கிலாந்துக்கான முன்னாள் தூதர் வாடிம் பிரிஸ்டைகோ தெரிவித்துள்ளார்.





