இந்தியா

100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலை ஏழைகளுக்கு எதிரானது – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதத்தை வழங்கும் திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என இந்திய அரசியல்வாதியான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டமூலம் ஏழைகளுக்கு எதிரானது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்த கொண்டு வந்தது.

கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் பெயரை, ‘விக்சித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் & அஜீவிகா மிஷன் ’ என பெயர் மாற்றி, பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளும் சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த சட்டமூலம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

Sainth

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!