தென் சீனக் கடலில் விபத்துக்குள்ளான இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள்
தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள் தனித்தனி சம்பவங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பசிபிக் கடற்படை(Pacific Fleet) தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய MH-60R சீ ஹாக்(Sea Hawk) ஹெலிகாப்டரின் மூன்று பணியாளர்களும், F/A-18F சூப்பர் ஹார்னெட்(Hornet) போர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பசிபிக் கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டு விபத்துகளுக்கான காரணங்கள் விசாரணையில் உள்ளன என்று பசிபிக் கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump), இந்த விபத்துகள் அசாதாரணமானவை என்றும், அவை எரிபொருள் காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 4 visits today)





