இலங்கையில் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு மாணவிகள் மாயம்

இலங்கையில் நேற்றைய தினம் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளனர்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக சென்ற மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ பகுதியிலுள்ள பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு பிரவேசித்துள்ளனர்.
கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டி – நாகஸ்தென்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இரு மாணவிகளும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)