காசாவில் இரு மருத்துவமனைகளின் சேவைகள் நிறுத்தம்
கடந்த சில நாட்களாக இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாலும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் ஏற்பட்ட சேதத்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் காசா நகரத்தின் இரண்டு மருத்துவமனை சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சினால் அல்-ரான்டிசி குழந்தைகள் மருத்துவமனை சேதமடைந்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கண் மருத்துவமனையின் அருகே தாக்குதல் நடந்துள்ளதால் அங்கு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இஸ்ரேலின் இனப்படுகொலை கொள்கையின் ஒரு பகுதியாக காசா மாகாணத்தில் உள்ள சுகாதார அமைப்பை வேண்டுமென்றே குறிவைக்கப்படுகின்றது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.





