நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் இரண்டு டெல்டா விமானங்கள் மோதி விபத்து
நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இரண்டு டெல்டா ஏர் லைன்ஸ் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறைந்த வேகத்தில் விமானங்கள் மோதியதால் பெரியளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
வர்ஜீனியாவின் ரோனோக்கிற்கு 32 பேரை ஏற்றிச் சென்ற விமானம் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது வட கரோலினாவின் சார்லோட்டிலிருந்து 61 பேருடன் வந்த விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஒரு விமானப் பணிப்பெண் காயமடைந்துள்ளார், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பயணிகள் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)





