Stoke-on-Trent இல் இரு சிறுவர்கள் உயிரிழப்பு : பெண் ஒருவர் கைது!
ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டில் உள்ள வீட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 11 வயது சிறுவன், மற்றும் 7 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த குழந்தைகளுக்கு தெரிந்த 49 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆழந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)





