காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக துனிசிய வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம்
வட ஆபிரிக்க நாடான துனிசியாவில், ஜனாதிபதி கைஸ் சையத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், சமீபத்தில் இரு வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் தலைநகர் துனிஸின் தெருக்களில் இறங்கி, இரண்டு வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு கோபத்தை வெளிப்படுத்தினர், அவர்களில் ஒருவர் தடுப்புக்காவலின் போது சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு பத்திரிகையாளர்களும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.
“பயம் இல்லை, பயம் இல்லை. அதிகாரம் மக்களுக்கே” என நீதி அரண்மனை அருகே போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
(Visited 11 times, 1 visits today)