அகிம்சை வழியில் உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி
 
																																		மாவீரர் நாளான இன்று அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
