இந்தியா

ஆந்திராவில் வயலில் கிடைத்த பொக்கிஷம் : விரையும் மக்கள்!

ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய 30 கேரட் வைரத்தை  2 கோடி ரூபாயிற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம்,  கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி,  துக்கிலி,  மடிகேரா,  பெகதிராய்,  பேராபலி,  மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில்  மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு  விவசாயி ஒருவர்  60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது.

அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலையுயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்தஇ வைர கற்களை எடுப்பதற்காக  கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு  வயல் வெளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைர கற்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில்  விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரத்தை கண்டுபிடித்ததாகவும்  அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!