டிக்டாக் விற்பனை காலக்கெடு நீட்டிக்குமா? முதலீட்டாளர்கள் குழப்பம்.
அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடுகளை அதன் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance) விற்க வேண்டும் என்ற காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படவிருக்கும் நிலையில். அதை வாங்குவதற்குத் தயாராக உள்ள அமெரிக்க முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பில்லியனரும், முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் (los angeles dodgers) உரிமையாளருமான ஃபிராங்க் மக்கோர்ட் (Frank McCourt), இந்தக் காலதாமதத்தால் தான் காத்திருக வேண்டி இருப்பதாகப் பிபிசி-யிடம் தெரிவித்தார்.
அவர் தனது ப்ராஜெக்ட் லிபெர்ட்டி ( ‘Project Liberty’) என்ற திட்டத்தின் மூலம் டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்கத் தேவையான மூலதனத்தைத் திரட்டிவிட்டார். இருப்பினும், விற்பனைக்கான பச்சைக்கொடி காட்டப்படுவதற்காகக் காத்திருக்கிறார்.
டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டன்ஸ் (ByteDance) சீன அரசுடனான நெருங்கிய தொடர்புக்கு. இது அமெரிக்கப் பயனர்களின் தரவுகள் மற்றும் தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்தும் என்று அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் கவலைப்படுகின்றனர்.
2024 இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, டிக்டாக் அமெரிக்காவில் ஜனவரி 2025 இல் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தக் காலக்கெடுவை மீண்டும் மீண்டும் நீட்டித்து வருகிறார். தற்போது செவ்வாய்க்கிழமை அன்று, இது ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மேலும் சில பிற முதலீட்டாளர்களும் உள்ளனர். ஒரக்ள் (Oracle) தலைவர் லாரி எல்லிசன் (Larry Ellison), சில்வர் லேக் (Silver Lake), மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் MGX உள்ளிட்ட வேறு சில முதலீட்டாளர்கள் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தில் சுமார் $14 பில்லியன் மதிப்பீட்டில் ஒரு பங்கை வைத்திருக்கின்றனர்.
இந்த விற்பனை தொடர்பான வணிக விதிமுறைகள் அமெரிக்கா மற்றும் பைட் டன்ஸ் (ByteDance) தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டாலும். இந்த ஒப்பந்தத்திற்கு சீன அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், அல்காரிதத்தின் உரிமம் வழங்குவது உட்பட. சீனாவின் வெளியுறவுத்துறை, இந்த விற்பனை ‘சந்தை பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாக’ இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விற்பனையை வலியுறுத்துகின்றனர். ஆனால், விற்பனைக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பைட் டன்ஸ் (ByteDance). சீன அரசின் பிடிவாதம் காரணமாக, விற்பனைக் காலக்கெடு தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் ஃபிராங்க் மக்கோர்ட் (Frank McCourt), போன்ற முதலீட்டாளர்கள், தாங்கள் பணத்துடன் தயாராக இருந்தும். இந்த அரசியல் இழுபறி காரணமாக ஒரு தெளிவான முடிவு தெரியாமல் உள்ளனர்.





