இலங்கையில் வாய் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு
இலங்கையில் வாய் புற்று நோயினால் தினமும் மூன்று பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் சுமார் 06 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர் கூறினார்.
வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்ட நிபுணர் டாக்டர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் 05 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலான இளம் பிள்ளைகள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதில்லை என பாடசாலை சுகாதார ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.





