மேற்கு ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேற்கு ஹைட்டியைத் தாக்கியது, அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, தலைநகரான Port-au-Prince-க்கு மேற்கே 300km (186 மைல்) தொலைவில் உள்ள Grand’Anse பகுதியில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
Grand’Anse இல் உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான Christine Monquele, செய்தி நிறுவனத்திடம், இதுவரை மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன என்று கூறினார்.
“அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது வீடு இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்டனர்,” என்று மோன்குலே கூறினார். சிவில் பாதுகாப்பு நிறுவனம் 28 பேர் காயமடைந்ததாகக் கணக்கிட்டுள்ளது, “மற்ற சாத்தியமான உயிரிழப்புகளை” தேடும் பணி நடந்து வருவதாக அவர் கூறினார்.
கரீபியன் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் பலியாகினர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.