இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

பாலஸ்தீன நாடு இனி இருக்காது – இஸ்ரேல் பிரதமரின் பேச்சால் பரபரப்பு

பாலஸ்தீன நாடு இனி இருக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன எங்களுக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பாலஸ்தீன நாடு இனி இருக்காது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது. இஸ்ரேல் பிரதமரின் பேச்சுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி