இலங்கையில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் சுகவீனம் அடைந்ததால் பரபரப்பு!
இலங்கையில் பாடசாலைக்கு சென்ற 40 மாணவர்கள் இன்று (30.09) திடீரென சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மெதிரிகிரியவில் உள்ள மண்டலகிரிய தேசியப் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் சிரமதாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு அரிப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி அதிபர் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)





