90 கிமீ வேகத்தை தாண்டி வீசிய காற்று – பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
BY VD
December 16, 2025
0
Comments
41 Views
பிரேசில் பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை நேற்று சரிந்து விழுந்துள்ளது.
பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் (Rio Grande do Sul) மாநிலத்தில் வீசிய புயல் காற்று காரணமாக இந்த அனர்த்தம் நேர்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பிரேசிலின் சிவில் பாதுகாப்பு நிறுவனமான டெஃபெசா (Defesa) அந்தப் பகுதியில் மணிக்கு 90 கிமீ வேகத்தைத் தாண்டிய காற்று வீசியதாக மதிப்பிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட குறித்த கட்டமைப்பு கீழே விழுந்தாலும் உடையவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அந்தப் பகுதி உடனடியாக அதன் ஊழியர்களால் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குள் குப்பைகளை அகற்றத் தொடங்கியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி