இலங்கை

திருகோணமலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு-காணொளி

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (17வயது) ஐ.அஸ்கான் (21வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் காயம் அடைந்த இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்