இலங்கையில் உச்சம் தொட்ட எலுமிச்சை பழத்தின் விலை – கிலோ 3500 ரூபாய்!

இலங்கையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 3,000-3,500 ரூபாய் என்ற சில்லறை விலையில் விற்கப்படுவதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
இதன்படி ஒரு எலுமிச்சை பழத்தின் விலை 50-60 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு காரணமாக சில நுகர்வோர் எலுமிச்சை பழத்தை கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டதாக காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
எலுமிச்சை பழத்தின் இருப்பு பற்றாக்குறையே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(Visited 6 times, 1 visits today)